(க.கிஷாந்தன்)

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பழக்கடை ஒன்றின் மீது மோதுண்டதில் பழக்கடை சேதமடைந்துள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தானது குறித்த சொகுசு பஸ் நுவரெலியாவிலிருந்து புறப்பட்டு ஹட்டன் நோக்கி சென்ற பஸ், பயணிகளை ஹட்டன் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டதன் பின்னர் வழமையாக பஸ் தரிக்கும் இடத்திற்கு பஸ்ஸை செலுத்தும் போது முன்னோக்கி சென்ற பஸ்ஸின் தடுப்புக்கட்டை செயழிலந்ததன் காரணமாக குறித்த பழக்கடை மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லையெனவும் பழக்கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.