2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டு பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சுகாதாரம், போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமைதாங்கினார். மேலும் இந்நிகழ்வில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.