(நா.தினுஷா) 

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏனைய அமைச்சுக்களின் விடயங்களில் தலையிட வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தியதாக கடந்த நாட்களாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானதாகும்." என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க  தெரிவித்தார்

இன்று வெளிவேரிய கிரிக்கித்த ஸ்ரீ பமனு பௌத்த மத்தியஸ்தானத்தில் இடம்பெற்ற பௌர்ணமி விசேட சமய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்  போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"விளையாட்டு துறை தொடர்பாக 44 ஆவது அத்தியாயம் காணப்படுவதாக சில வியாக்கியானங்கள் இடம்பெறுகின்றன. எனக்கு தெரிந்தளவில் 44 ஆம் அத்தியாயம் எதுவுமில்லை அவ்வாறு இருக்குமாயின் அது தொடர்பில் அறிந்தகொள்ள ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ரணதுங்க அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான எதிர் தரப்பினரின் செயற்காடாகவே கொள்ள வேண்டும்.

காலி கிரிக்கெட் மைதானத்தில் விளையாட வேண்டாமென்று சர்வதேசம் அறிவிக்க வில்லை. குறித்த விளையாட்டு அரங்குக்குள் நிர்மானிக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதியினை அகற்றவே தீர்மானிக்கப்பட்டது இவ்விடயத்தில் எவ்வித அரசியல் பழி வாங்கள்களும் கிடையாது. காலி விளையாட்டு மைதானம் தொடர்பான பிரச்சினை பல வருடங்களாக காணப்படுகின்றது. 

இப்பிரச்சினையினை கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தவறான விடயமாகும்.  காலி விளையாட்டு மைதானம் சர்வதேச உரிமையாகக் காணப்படுவதால் அரசியல் நடவடிக்கைகளுக்கு இப்பிரச்சினையை எடுத்துக்கொள்ளாமல் சர்வதேசத்துடன் கலந்துரையாடி தீர்வுக் காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கலந்துரையாடலின் மூலம் விளையாட்டு துறையை முன்கொண்டு செல்வதற்கும் இப்பிரச்சினையை சுலபமாக தீர்த்து கொள்வதற்குமான வாய்ப்புக்களை ஏற்ப்படுத்திக்கொள்ள முடியும்.

தொழிநுட்ப வளர்ச்சிகளினால் புதிய கட்டிடங்களை நிர்மானிக்கவும் அவற்றை அகற்றுவதற்குமான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. காலி சுற்றுலா வலயமாக காணப்படுவதால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அங்கு பயணிக்ககூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.  இதனால் காலி விளையாட்டு மைதானம் தொடர்பான பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மாற்ற முயற்ச்சிப்பது தவறான விடயமாகும். 

அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் எனக்கும் எந்தவொரு கருத்து முரண்பாடும் ஏற்படவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்ட ஆலோசகர். இருப்பினும் நான் ஒரு விளையாட்டு வீரர் என்ற வகையில் விளையாட்டு  துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் சிலவற்றை நான் அறிந்துள்ளேன்.

விளையாட்டு துறைதொடர்பான சட்ட ஏற்பாட்டில் சில ஏற்பாடுகளை  தற்போதைய தேவைக்கேட்ப மாற்றியமைப்பதற்கான சூழல் காணப்படுகின்றது. இது குறித்து எனது கருத்தைதினையே தெளிவுப்படுத்தினேன். இதன் பின்னர் ஜனாதிபதியும் எந்தவிமான கருத்தினையும் முன்வைக்கவில்லை.

அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனது அமைச்சு பதவிக்குறிய விடயத்தினை மாத்திரம் பாராளுமன்றத்தில் கலந்துரையாடுமாறு எந்தவொரு எச்சரிக்கையினையும் எனக்கு அறிவிக்கவில்லை. இது குறித்து கடந்த புதன்கிழமை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவை முடிவின்போதும் தெளிவுப்படுத்தினார். இதனை அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனமாவே கொள்ள வேண்டும். 

விளையாட்டு துறையும் ஏனைய துறைகள் போன்று எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இயங்க வேண்டும். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  விளையாட்டு துறையின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காணப்பட வேண்டிய பல விடயங்களுக்கு அரசியல்வாதிகளின் பரிந்துரைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றது." என்றார்.