(இராஜதுரை ஹஷான்)

யாழ். கல்லூரியின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு யாழ். கல்லூரியின் நிர்வாக சபையின் தலைவரும் உப தலைவரும் பதவி விலக வேண்டும். இல்லாவிடின் பாரிய எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்து யாழ். கல்லூரியின் பழைய மாணவர்களின் கொழும்பு‍கிளை உறுப்பினர்கள் இன்று யாழ்.கல்லூரியின் காலி வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

யாழ். கல்லூரியின் நிர்வாக சபையின்  தலைவர் தெரிவு முறைமையில் பல விடயங்கள் சூட்சமமான முறையில் மாற்றியமைக்கப்பட்டு தற்போதைய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்  பின்னர்  நிர்வாக சபையில் வெளிப்படையாகவே பல அதிகார துஷ்பிரயோகங்கள்  இடம்பெற்று வருகின்றது. 

அத்துடன் அமெரிக்க அறக்கட்டளை  நிறுவனம் இந்த துஷ்பிரயோகங்களை கண்டித்து  பலமுறை நிர்வாக சபைக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதன் பிறகும் எவ்வித முன்னேற்றகரமான தீர்மானங்களும் நிர்வாக சபை மேற்கொள்ளவில்லை.

தற்போது  நிர்வாக சபையின்  தலைவர் மற்றும் உப தலைவர் பதவி விலக வேண்டும் இல்லாவிடிக் கல்லூரியின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதி முடக்கப்படும் என்று அமெரிக்க தொண்டு நிறுவனம் நிபந்தனை விடுத்துள்ளது.

ஆககே மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டியே யாழ். கல்லூரியின் பழைய மாணவர்களின் கொழும்பு‍கிளை உறுப்பினர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.