நாட்டின் பல பாகங்களிலும் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த வகையில் ஊவா, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய காலநிலை காணப்படும்.

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சு காணப்படுவதுடன் காற்றின் வேகமும் அதிகரிக்கும்.

கடற்பிராந்தியங்களை பொறுத்தவரையில் கிழக்கு கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சு பதிவாவதுடன் கொழும்பு தொடக்கம் மாத்தறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது 30 கிலோமீற்றர் முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

ஆகவே கடலுக்கு செல்லும் மீனவர்களையும் பொது மக்களையும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.