கனிஷ்ட மெய்வல்லுநர்கள் 9 பேருக்கு, 2024 ஒலிம்பிக் வரை பூரண அனுசரணை

Published By: Digital Desk 4

27 Jul, 2018 | 02:36 PM
image

(நெவில் அன்தனி)

நீண்டகாலத் திட்டங்களை அமுல்படுத்தும் போது அதனால் சிறந்த பலனை ஈட்டமுடியும் என்பதற்கு அமைய ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஒன்பது கனிஷ்ட மெய்வல்லுநர்களுக்கு, ஒலிம்பிக் போட்டிகள் வரை அனுசரணை வழங்க தீர்மாணிக்கப்படடள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தாபாவின் வேண்டுகோளுக்கு அமைய ஐந்து தனியார் நிறுவனங்கள் நிபந்தனை அடிப்படையிலான அனுசரணை வழங்கியுள்ளன.

நான்கரை கோடி ரூபா பெறுமதியான இந்த அனுசரணை இந்த மாதத்திலிருந்து 2024 ஒலிம்பிக் வரை நீடிக்கவுள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஒன்பது வீர, வீராங்கனைகளுக்கு இந்த மாதத்திலிருந்து மாதாந்தம் 75,000 ரூபா அனுசரணை வழங்கப்படவுள்ளது.

இந்த அனுசரணை உதவித் தொகையை விளையாட்டுத்துறைக்கு மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும் தனிப்பட்ட அல்லது சொந்தத் தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது எனவும் அனுசரணை வழங்கும் வைபவத்தில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இவ் வைபவம் நேற்று பிற்பகல் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது

மேலும் கனிஷ்ட மெய்வல்லுநர்கள் ஒன்பது பேரையும் இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தொடர்ச்சியாக கண்காணிப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள்

ஆண்கள் 

400 மீற்றர் அருண தர்ஷன (தங்கம்) 45.79 செக்,  புதிய ஆசிய கனிஷ்ட சாதனை. 

4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டம் (தங்கம்) அருண தர்ஷன, பசிந்து கொடிகார, ரவிஷ்க இந்த்ரஜித், பபாசர நிக்கு  3 நி. 08.70 செக், 

400 மீற்றர் பசிந்து கொடிகார (வெள்ளி) 46.96 செக்,

பெண்கள்

3,000 மீற்றர் தடைதாண்டி ஓட்டம் பாரமி வசன்தி மாரிஸ் ஸ்டெல்லா (தங்கம்) 10 நி. 21.54 செக்.

100 மீற்றர் அமாஷா டி சில்வா (வெள்ளி) 11.71 செக்.

200 மீற்றர் அமாஷா டி சில்வா (வெள்ளி) 24.47 செக்.

400 மீற்றர் டில்ஷி ஷ்யாமலி குமாரசிங்க (வெள்ளி) 54.03 செக்.

800 மீற்றர் டில்ஷி ஷ்யாமலி குமாரசிங்க (வெண்.) 2 நி..04.53 செக்.

4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டம் (வெண்கலம்) அமாஷா டி சில்வா, டில்ஷி ஷ்யாமலி குமாரசிங்க, சச்சினி தாரக்க திவ்யாஞ்சலி, ரொமேஷி இஷாரா ஆதித்யா (3 நி. 45.16 செக்.)

அனுசரணைக்கு உரித்தான பாரமி வசன்தி மாரிஸ் ஸ்டெல்லா, சச்சினி திவ்யாஞ்சலி, இஷாரா ஆதித்யா, டில்ஷி ஷ்யாமலி குமாரசிங்க, பசிந்து கொடிகார ஆகியோர் தங்களுக்கான அனுசரணை ஆவணங்களை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டனர்.

அருண தர்ஷன, அமாஷா டி சில்வா, பபாசர நிக்கு ஆகியோர் உயர்தரப் பரீட்சைக்கு தயாராவதால் அவர்கள் சார்பில் பெற்றோரும் பயிற்றுநர்களும் அனுசரணை ஆவணங்களை அமைச்சர் பைசர் முஸ்தாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

அனுசரணை வழங்கும் வைபவத்தில் தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ, அனுசரணை வழங்கிய நிறுவனங்கள் சார்பாக எல். பெர்னாண்டோ (எக்செஸ் எஞ்ஜினியரிங்), ஹேமக்க டி சில்வா (பெயார்வேஸ் ஹோல்டிங்ஸ்), ஆர். ரெங்கநாதன் (செலின்கோ லைவ் இன்சூரன்ஸ்), அஷோக் பத்திரகே (சொவ்ட் லொஜிக்) ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். அனுசரணை வழங்கியவர்களில் பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தக அதிபர் ஒருவர் இவ் வைபவத்தில் கலந்துகொள்ளவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43