பிரிவெனா ஒன்றில் கல்வி பயிலும் 11 வயதான மாணவனை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய அதே பிரிவெனாவில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப் பட்ட  மாணவன் குறித்த ஆங்கிலப்பாட ஆசிரியரின் வீட்டில் தங்கியிருந்து பிரிவெனாவில் கல்வி கற்று வந்துள்ளான்.

கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து குறித்த மாணவன் ஆசிரியரால் பல முறை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளான் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்தள்ளது.

இவ்வாறிருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிவெனாவிற்கு செல்ல முடியாது என மாணவன் அடம் பிடித்ததையடுத்து தந்தை மாணவனை அழைத்து விசாரித்த போது மாணவன் அழுது கொண்டே ஆசிரியரின் லீலைகளை கூறியுள்ளான்.

அதன் பின்னர் தந்தை கடந்த 24ஆம் திகதி அக்மீமன பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் 25ஆம் திகதி ஆசிரியரை பொலிஸார் நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.