எந்த முறைமையானாலும் முகங்கொடுக்க தயார் - பிரசன்ன ரணதுங்க

Published By: Vishnu

27 Jul, 2018 | 12:21 PM
image

(எம்.மனோசித்ரா)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அடைந்த தோல்வியின் காரணமாக மாகாண சபை தேர்தல்களையும் அரசாங்கம் திட்டமிட்டு காலம் தாழ்த்துவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் கூட்டு எதிர்கட்சியின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தினாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு கூட்டு எதிர்கட்சி தயாராகவேவுள்ளது. தற்போது மீண்டும் பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இந்த வாரம் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எனவே மீண்டும் அடுத்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு இவ்வாறான செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. தேர்தலை காலம் தாழ்த்துவதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது. தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றமை இ நாட்டிற்கு பொருத்தமற்ற அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராகவே அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17