Huawei Mate 8 மற்றும் GR5 தற்போது இலங்கையில்

Published By: Priyatharshan

01 Mar, 2016 | 11:30 AM
image

Huawei மற்றும் அதன் தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியன ஒன்றிணைந்து, சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற வெகு விமரிசையான நிகழ்வொன்றில் Huawei Mate 8 மற்றும் Huawei GR5 ஆகிய இரு பிரதான நவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வைத்துள்ளன. 

புதிய இரட்டை ஸ்மார்ட்போன்கள் வழங்கும் ‘மின்வலு மற்றும் திறன்  புத்தாக்கத்தின்’ மகிமையை 400 இற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

பொன் மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கப்பெறுகின்ற Mate 8ஆனது “சர்வதேச தளமேடையில் வியாபாரத்தின் புதிய பாணி” என்ற தனித்துவத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனம் புத்தாக்கமான வன்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளதுடன், Kirin 950 chipset இல் தொழிற்படும் முதலாவது ஸ்மார்ட்போனாகவும் திகழ்கின்றது. 

100 சதவீதம் வரையான CPU மேம்படுத்தல் மின்வலு, 125 சதவீதம் வரையான GPU  தொழிற்பாட்டுத்திறன் மற்றும் Kirin 925 உடன் ஒப்பிடுகையில் 70 சதவீதம் மேம்பட்ட மின்வலுத் திறன் ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

“பாரிய கனவுகளைக் கொண்டுள்ள இளம் சிந்தனைகளுக்கு” முன்மாதிரியாக அமைந்துள்ள GR5 ஆனது பொன்னிறத்தில் கிடைப்பதுடன், CMOS சென்சார் குவிக்கப்பட்ட 13 MP F2.0 பின்னோக்கிய கமெரா, 7 செமீ microshot மற்றும் 5MP முன்னோக்கிய கமரா ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

Huawei ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வாங் கூறுகையில்,

“Huawei இனைப் பொறுத்தவரையில் இலங்கை ஒரு முக்கிய சந்தையாகவும், மூலோபாய முதலீட்டு மையமாகவும் காணப்படுகின்றது. 

Huaweiசர்வதேசரீதியாக வலிமையான பெறுபேற்றுத்திறனை வெளிப்படுத்திவருகின்ற நிலையில் ஒவ்வொரு உற்பத்தியும், ஒவ்வொரு சந்தைப்பிரிவிற்கும் மிகச் சிறந்த தெரிவாக அமைவதை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டிணைக்கப்பட்ட உற்பத்தி வழங்கல் அணுகுமுறையை அது பின்பற்றி வருகின்றது. 

Huawei இன் மிகச் சிறந்த தூதுவர்களாகத் திகழ்கின்ற எமது அனைத்து வாடிக்கையாளர்கள் தொடர்பில் நாம் தொடர்ந்தும், கவனத்தையும், ஈடுபாட்டையும் காண்பித்து வருவதுடன், மகத்தான விலையில் மிகச் சிறந்த உற்பத்தியை நாம் தொடர்ந்தும் வழங்கும் அதேசமயம் மிகச் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் துணையுடன் இதனை சிறப்பாக முன்னெடுப்போம்” என்று குறிப்பிட்டார்.

Huawei Mate 8  கட்டமைப்பானது நான்கு A72 2.3 GHz processor கள் மற்றும் நான்கு A53 1.8 GHz processor களின் ஊடாக உயர் தொழில்நுட்பத்திறனுடன், மின்வலுத்திறனை சமநிலையில் பேண உதவுகின்றது. 4000mAh உயர் செறிவு கொண்ட மின்கலம் ஒன்றைக் கொண்டுள்ள Mate 8, வழமையான பாவனையின் போது இரு தினங்களுக்கும் அதிகமாக நீடித்து உழைக்கும் வகையில் தொழிற்துறையில் முன்னிலை வகிக்கும் மின்வலுத்திறனை வழங்குகின்றது.

Huawei GR5 ஆனது 10 அழகுத்தோற்ற மட்டங்கள், மெதுவான அசைவு மற்றும் நேரம் கழிந்த தொழிற்பாடுகள் ஆகியவற்றின் துணையுடன் மிகவும் நேர்த்தியான ஒரு செல்பி வடிவம் அடங்கலாக ஒட்டுமொத்த அம்சங்களையும் கொண்ட கமரா ஒன்றைக் கொண்டுள்ளதுடன், பாவனையாளர்கள் தமது தீரச்செயல்களையும், தருணங்களையும் உடனடியாகவே தம்வசப்படுத்திக் கொள்ள இடமளிக்கின்றன. 

அதிசிறந்த தொழிற்பாட்டுத்திறனை வழங்கும் Qualcomm Snapdragon processor 616 அம்சத்தை இச்சாதனம் கொண்டுள்ளதுடன், பாவனையாளர்களின் வேகத்திற்கு ஈடான தொலைபேசி தொழிற்பாடுகளை உறுதிசெய்கின்றது. 

3000mAh மின்கலமானது கடுமையான பாவனையின் போது 24 மணி நேரமும் உழைக்கும் வலுவையும், வழமையான பாவனையின் போது மூன்று தினங்கள் முழுவதும் நீடித்து உழைக்கும் வலுவையும் கொண்டுள்ளது.

சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் அவர்கள் இது தொடர்பில் வலியுறுத்துகையில் “Huawei மற்றும் சிங்கர் ஆகியன ஒன்றிணைந்து, நவீன தொழில்நுட்பம், இணையற்ற தரம் ஆகியவற்றுடன் அனைத்து இலங்கையர்களின் வாழ்வுகளையும் வளப்படுத்தும் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், நாடெங்கிலுமுள்ள அனைத்து மக்களும் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளை அனுபவித்து, அவர்கள் இன்னும் அதிகமானவற்றை சாதிப்பதற்கு இடமளிக்கும் வகையில் அவர்களை ஆளுமைப்படுத்தி வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

Huawei Mate 8 ஆனது விரல் அடையாள பாதுகாப்பு அம்சத்துடன், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் புதிய தலைமுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுமுறை விரல் அடையாள சென்சார் திறன்மிக்க அடையாளம் காணல் துறையை 10 சதவீதத்தால் மேம்படுத்தியுள்ளது. 

மேலும், விரல் அடையாள உராய்வு இனங்காணல் பாதுகாப்பு நிலையில் மூன்று மட்டங்களைக் கொண்டுள்ளது. இது பாவனையாளர்களுக்கு உயர் மட்டத்திலான பாதுகாப்பை வழங்குகின்றது. புதிய சென்சார் வடிவமைப்பு திறக்கும் வேகத்தை 100% இனால் அதிகரிக்கச் செய்கின்றது.

Huawei GR5 மேம்பட்ட இரண்டாவது தலைமுறை விரல் அடையாள இனங்காணல் முறையைக் கொண்டுள்ளதுடன், முன்பை விடவும் வேகமான, கச்சிதமான மற்றும் பாதுகாப்பான சாதனத்திற்கு வழிகோலுகின்ற மேம்பட்ட தொழிற்பாட்டுக் கட்டுப்பாட்டிற்கு உடனடி அடைவைத் தருகின்றது. ஈரமான அல்லது உலர்ந்த விரல்களுக்கும் இது தொழிற்படுவதுடன், எந்தக் கோணத்திலும் 360-பாகை முறையை பயன்படுத்தி இனங்காணல் தொழிற்பாட்டைத் தருவதுடன், எவ்வேளையும், உபயோகிக்கும் இலகுவையும், சௌகரியத்தையும் வழங்குகின்றது.

Huawei சாதனங்களுக்கான இலங்கைக்கான தலைமை அதிகாரியான ஹென்றி லியு குறிப்பிடுகையில்,

“Huawei Mate 8 ஆனது இன்றைய உலகில் எந்த இடத்தில் இருந்தும் தமது பணிகளைத் தொடர விரும்புகின்ற தொழில்சார் துறையினருக்கு பொருத்தமான “புதிய வியாபார பாணி” எண்ணக்கருவை வழங்குவதுடன், வியத்தகு தொழிற்பாட்டுத்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் மின்கலம் ஆகியவற்றின் ஒப்பீட்டு நியமமாகவும் திகழ்கின்றது. மற்றுமொரு பிரதான உற்பத்தியான Huawei GR5 ஆனது G வரிசை ஸ்மார்ட்போன் உற்பத்திகளில் அதிநவீனமானதாக காணப்படுவதுடன், கச்சிதமான விரல் அடையாள இனங்காணல் தொழில்நுட்பம், அதிசிறந்த கமரா மற்றும் அதிவிசேட முகத்திரை ஆகியவற்றுடன் இளம் தலைமுறையினருக்கான விசேட வடிவமைப்புக்களையும் கொண்டுள்ளது. 

இந்த இரு உற்பத்திகளும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மிகச் சிறந்த அடைவு மற்றும் சிங்கர் ஸ்ரீலங்காவின் விசுவாசம் ஆகியவற்றுடன் உள்நாட்டுச் சந்தைக்கு மிகவும் பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளன” என்று கூறினார்.

Huawei Mate 8 ஆனது ரூபா 92,499 என்ற விலையிலும், GR5ஆனது ரூபா 38,999 என்ற விலையிலும் கிடைக்கப்பெறுகின்றது. இலங்கையின் முன்னணி ஸ்மார்ட்போன் சந்தைப்படுத்தல் நிறுவனமான சிங்கர்  ஸ்ரீ லங்கா, சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள், அடங்கலாக 400 இற்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தக காட்சியறைகள் மற்றும் நாடெங்கிலும் 1,500 டிஜிட்டல் மீடியா  விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள சிங்கரின் டிஜிட்டல் மீடியா ஊடகங்கள் அடங்கிய நாட்டின் மிகப் பாரிய சில்லறை வர்த்தக வலையமைப்பின் ஊடாக இந்த உற்பத்திகள் எங்கும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18