பிரித்தானியாவின் வசிக்கும் இந்த குள்ள தம்பதியினர் தங்களின் இரண்டாவது குழந்தையின் பிறப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

லாரா என்ற 4.1 அடி உயரத்தினை கொண்ட 28 வயது நிரம்பியவர், இவர் நாதன் ஃபிலிப்ஸ் என்ற 3.11 அடி உயரத்தினை கொண்ட 38 வயது நிரம்பியவரை திருமணம் செய்துக்கொண்டார்.  

குறித்த ஜோடி வருகின்ற செம்டெம்பர் மாதத்தில் பிறக்கவுள்ள தங்களின் இரண்டாவது குழந்தையின் வருகையினை எதிர்பார்த்து காத்திருகின்றன.

இரு வருடங்களுக்கு முன் ஒரு விசித்திர விழாவில் வைத்து குறித்த ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.இவர்களின் முதலாவது குழந்தையானது நான்கு வயதினை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஜோடியின் முதலாவது குழந்தையாகிய நாதன் ஜேஆர் பிரித்தானியாவின் முதலாவது இரட்டை குள்ள மனிதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு குள்ள இனத்தினை சேர்ந்த லாரா மற்றும் நாதன் ஆகிய இருவருக்கும் பிறந்த முதலாவது குழந்தையின் மரபணுவில் இருவர்களின் மரபணுக்களும் காணப்படுகின்றமை மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.