சீனாவே என் முன்மாதிரி ; இம்ரான் கான்

Published By: Digital Desk 4

26 Jul, 2018 | 10:09 PM
image

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெரும் நிலையில் உள்ள இம்ரான் கான் சீனாவை முன்மாதிரியாக கொண்டு மக்கள் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் உள்ள 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 4 மாகாண சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரையில், இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலையில் உள்ளது. இதுவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி மூலம் இம்ரான் கான் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான், வாக்களித்த பாகிஸ்தான் மக்களுக்கும், தனது 22 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு இந்த வெற்றியை தந்த இறைவனுக்கும்  நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும், பாகிஸ்தானின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர தாம் பார்த்துள்ளதாகவும், ஆனால் தற்போது பாகிஸ்தான் முற்றிலும் சீரழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் மக்கள் சிறந்த அரசை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழில் செய்வதற்கு உகந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சீனா தனது 70 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதை சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானை முன்னேற்றுவதில் சீனாவை முன்மாதிரியாக கொண்டு பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47