சில ரயில் தொழிற்சங்கள் இணைந்து இன்று திடீரென மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பால் ரயில் சேவைகள் தாமதம் அடைந்த நிலையில், பயணிகள் மற்றும் ரயில் பணியாளர்களுக்கும் இடையே கோட்டை ரயில் நிலையத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தாலும் உரிய முறையில் ரயில் சேவைகள் இயங்கவில்லை என ஆத்திரமடைந்த பயணிகள்  ரயில் கட்டுப்பாட்டு அறைக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.