கிளிநொச்சியில்  சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுகின்ற  உத்தியோகத்தர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இரணைமடு பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் 5 வருடங்கள் சேவையாற்றியவர்களில் முதல்கட்டமாக 100 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.  

இன்றைய தினம் முதற்கட்டமாக நூறு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் ஜந்து வருடங்களை பூர்த்தி செய்த ஏனையவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் இவ்வாறு 1507 பேருக்கு கிளிநொச்சியில் நியமனங்கள் வழங்கி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.

 குறித்த நியமனத்தினை சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிர்மல் கொஸ்வத்த அவர்கள் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.