"அரசாங்கம் அடுத்த மாதம் ஆட்டம் காணும்"

Published By: Digital Desk 7

26 Jul, 2018 | 05:06 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

"பேருவளை கலவரம் குறித்து விசாரணை நடத்தினால் அதன் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்பட்டு விடும். எனவேதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கி அதனை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பிரயத்தனம் காட்டி வருகிறது. எனினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பிக்கும்" என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பியல் நிஷாந்த மேலும் குறிப்பிடுகையில்,

"மொனராகலையில் பாடசாலை மாணவி ஒருவரை ஆசிரியர்கள் இருவர் துஷ்யபிரயோகப்படுத்தியிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகினால் பிள்ளைகளை நம்பிக்கையுடன் பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கல்லியமைச்சராக அகிலவிராஜ் காரியவசம் பதவியேற்றது முதல் அத்துறை சீர்குலைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. கல்வித்துறையில் தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்வித்துறையினருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக அரசாங்கம் 317 பாடசாலைகளில் வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆகவேதான் ஆசிரிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இவ்வாறான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்குவதற்கு இடமளிக்க முடியாது. அது குறித்து கல்விச் சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்றரை வருடங்களாக  அவ்வாறான வங்கிக் கணக்குகளைத் தேடுகின்றனர். எனினும் எதனையும் கண்டுகொள்ள முடியவில்லை.

எனவே தொடர்ந்தும் இவ்வாறு தேடுதல் நடத்திக்கொண்டிருக்காது உடனடியாக கண்டு பிடித்து நடவடிக்கை எடுங்கள். அதனைவிடுத்து வெறுமனே சவால் விடுத்துக்கொண்டிருக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது பேச்சின் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கே முயற்சிக்கிறார்.

இவ்வாறான நிலையில் பேருளையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும் நஷ்டஈட்டுக்கு முன்னர் அக்கலவரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அக்கலவரத்தை விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு ஒன்று அமைப்பதாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் குறிப்பிட்டது. எனினும் தற்போது ஆணைக்குழுவும் இல்லை, விசாரணையும் இல்லை. விசாரணை நடத்தினால் அக்கலவரத்தின் பிரதான சூத்திரதாரி வெளிப்பட்டு விடுவார் என்பது அமைச்சர் ராஜிதவுக்குத் தெரியும். ஆகவேதான் நஷ்டஈடு வழங்கி குறித்த சம்பவத்தை மூடி மறைப்பதற்கு எத்தணிக்கின்னறனர். 

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் வீட்டிற்கு பொலிஸார் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை கொழும்புக்கு அழைத்து வாக்குமூலம் பெற்றனர். இதன்மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் நடுநிலையைக் கண்டுகொள்ள முடிகிறது. 

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தனது வாக்குமூலத்தில், தான் விடுதலைப் புலிகளை விருத்தி செய்வதற்காக அவ்வாறான கருத்தைக் குறிப்பிடவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியை விருத்தி செய்வதற்கே அவ்வாறான கருத்தை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே குறித்த கருத்தின் மூலம் கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி விடுதலை புலிகள் அமைப்பை தம்வசம் வைத்துக்கொண்டமை தெளிவாகிறது.  

எனவே அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுசெய்துள்ளோம். அப்பேரணியுடன் அரசாங்கம் ஆட்டம் காணும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38