சேன் ஜாவோ யோங் என்ற  68 வயதுடைய நபரை அவரது மனைவி தவறுதலாக காரினை ஏற்றி கொன்ற சம்பவம் சீனாவில் பேரு காஜாவில் இடம்பெற்றுள்ளது.

காரினை இயக்கி கொண்டிருந்த மனைவி வீட்டின் முற்றத்தில் அமர்ந்து பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த கணவன் மீது தவறுதலாக ஏற்றியுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், சம்பவயிடத்திலேயே கணவன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவனை இழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய மனைவியிற்கு தீவிர மருத்துவ ஆலோசனை அவசியம் என அக்குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.