உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “கண்ணே கலைமானே” படத்திற்கு பிறகு அவர் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஒகே விற்கு பிறகு ஒரேயொரு வெற்றியை கொடுத்துவிடவேண்டும் என்று புது இயக்குநர்கள், பிரபல இயக்குநர்கள், ரீமேக் படம் என பல முயற்சிகளில் ஈடுபட்ட உதயநிதி இதில் எதுவும் கைக்கொடுக்காததால் தற்போது கண்ணே கலைமானே என்ற படத்தை நம்பியிருக்கிறார்.

இதனிடையே சினிமா தனக்கு கைகொடுக்காதோ என்ற குழப்பத்தில் கட்சியிலும் பதவியைப் பெற்று கட்சிப்பணிகளையும் கவனிக்கத் தொடங்கிவிட்டார். ஒரேயொரு கொமர்ஷல் வெற்றிக்காக குழம்பி போயிருக்கும் உதயநிதி, திரைக்கதை முழுமையான திருப்தியைத் தரவில்லை என்று இயக்குநர்கள் இரும்பு திரை படத்தை இயக்கிய பி. எஸ் மித்ரன் , ஐநாக் என்ற புது இயக்குநரையும் காக்க வைத்திருக்கிறார் உதயநிதி. 

இதனிடையே உதயநிதியை சந்தித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் பட இயக்குநர் மு.மாறன். ஒரு கதையை சொல்ல அது அவருக்கு பிடித்து விட இதில் தற்போது நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்த படம் தனக்கு வெற்றிப்படமாக அமையும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் உதயநிதி. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.