இராணுவத்திற்கு ஆள் சேர்கும் தேர்வில் உள்ளாடைகளுடன் மாணவர்கள் பரீட்சை எழுதிய சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் இராணுவத்தில் பதிவு எழுத்தாளர் பதவிக்காக ஆள் சேர்ப்பு தேர்வு நடைபெற்றது . இதில் 1150 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

பரீட்சைக்கு தோற்றவந்த அனைவரையும் தங்களின் ஆடைகளை களைந்து விட்டு உள்ளாடையுடன் பரீட்சை எழுதுமாறு கேட்டு கொள்ளப்பட்டனர். எனவே அனைத்து இளைஞர்களும் தமது உள்ளாடையுன் பெரிய மைதானத்தில் வைத்து பரீட்சையை எழுதினர்.

இது குறித்து இராணுவ ஆள்சேர்ப்பு இயக்குனர் ஆணையகத்தின் அதிகாரிகள் கூறும் போது, கடந்த முறை நடைபெற்ற ஆள்சேர்ப்பு தேர்வில் அனைவரும் எங்களை ஏமாற்றி பரீட்சையில் பார்த்தெழுதினர்;அதனை தவிர்ப்பதற்கு இதுபோல் தேர்வு எழுதுமாறு கூறினோம் என கூறியுள்ளனர்.