சீனாவின் உள்ள ஜாங்ஸூ பகுதியில் உஜின் என்ற வைத்தியசாலைக்கு வந்த ஷாங் (56) என்ற பெண், தனக்கு தொடர் முதுகுவலி இருப்பதாக வைத்தியரிடம் கூறியுள்ளார்.

எத்தனை நாட்களாக முதுகுவலி இருக்கிறது என வைத்தியர் கேட்டபோது, சில வருடங்களாக இருப்பதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

அவரை சில வைத்திய பரிசோதனைகள் செய்த வைத்தியர்கள், பின்னர் அவரது சிறுநீரகத்தொகுதியை பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் வலதுபுற சிறுநீரகத்தொகுதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காரணம், அதில் ஏராளமான சீறுநீரக கற்கள் இருந்துள்ளன. ஸ்கேன் செய்து பார்த்ததில் சுமார் ஆயிரக்கணக்கான கற்கள் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள், கற்களை எடுத்து, அந்த கற்களை ஒரு கண்ணாடி குடுவைக்கு போட்டு எண்ணியுள்ளனர்.

மொத்தம் 2,980 சிறுநீரக கற்கள் இருந்துள்ளன. அந்த பெண் இத்தனை கற்களுடன் எப்படி சில வருடங்கள் இருந்தார் என வைத்தியர்கள் வியந்துபோயுள்ளனர்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் உள்ள தகவல்படி, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்ராஜ் என்பவரின் சிறுநீரகத்தொகுதியில் இருந்து 1,72,155 கற்கள் அகற்றப்பட்டதே, இதுவரை உலக சாதனையாக உள்ளது.