டில்லி - மந்தாவாலி பகுதியில் பசிக் கொடுமையால் உணவு இல்லாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

டில்லியில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் 3 சிறுமிகளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது வைத்தியர்கள்  பரிசோதனை மூலம் 3 பேரும் உயிரிழந்தமை  தெரியவந்தது. 

இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து பொலிஸார் சிறுமிகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

 பட்டினி காரணமாக 3 சிறுமிகளும் இறந்தது தெரியவந்தது. இறந்த 3 சிறுமிகளும் சகோதரிகள். 

குறித்த சிறுமிகளில் இளைய சகோதரிக்கு 2 வயதும், அடுத்த சகோதரிக்கு 5 வயதும், மூத்த சகோதரிக்கு 8 வயதும் இருக்கும். சிறுமிகளின் தந்தை ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ரிக்‌ஷா காணாமல் போய் விட்டது.

பிழைப்புக்கு வழி இல்லாததால், தனது நண்பர் ஒருவரது வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் தான் 3 சிறுமிகளும் உயிரிழந்துள்ளனர்.  

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை டில்லி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.