லண்டனிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்த குடியிருப்பில் வசித்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

லண்டனின் மேற்கு ஹாம்ப்ஸ்டட் பகுதியில் உள்ள 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டடத்தில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 

இதனையடுத்து சுமார் 100 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் குடியிருப்பில் வசித்த 50க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். 

தீ சூழ்ந்த அறையில் சிக்கிக்கொண்ட 2 நபர்கள் மட்டும் கிரேன்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த நேரத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.