சீன தலைநகரான பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகே குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குண்டுவெடிப்பினால் எந்தவித உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் அமெரிக்க தூதரகத்தின் ஊழியர்களுக்கோ, அலுவலகத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.