முதியோர் பராமரிப்புப் பிரிவை ஸ்தாபித்துள்ள நவலோக வைத்தியசாலை

Published By: Robert

01 Mar, 2016 | 10:30 AM
image

சுகா­தாரப் பரா­ம­ரிப்புத் துறையில் தொடர்ச்­சி­யாக புத்­தாக்­கத்தை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும் என்ற தனது அர்ப்­ப­ணிப்­பு­ட­னான ஈடு­பாட்டின் ஒரு அங்­க­மாக, நவ­லோக வைத்­தி­ய­சாலை முதி­யோரைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக விசேட பிரி­வொன்றை ஸ்தாபித்­துள்­ளது.

சுகா­தாரப் பரா­ம­ரிப்புத் துறையில் ஏற்­பட்­டுள்ள நவீன மேம்­பா­டு­களால் மக்கள் கடந்த காலங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் நீண்ட ஆயுளைக் கொண்­டி­ருக்­கின்­றமை இதற்­கான கார­ண­மாகும். பிறப்பு வீதம் குறை­வ­டைந்து வரு­கின்­றமை மற்றும் முதியோர் சனத்­தொகை அதி­க­ரித்துச் செல்­கின்­றமை ஆகி­யன மெது­வான சனத்­தொகை நிலை­மாற்­றத்தை விளை­வித்­துள்­ள­துடன், இது இறு­தியில் சனத்­தொ­கையில் முதியோர் பெரும்­பான்­மை­யாக இருப்­ப­தற்கு வழி­வ­குக்கும். முது­மை­ய­டை­வது உடலில் உட­லியல் நடை­மு­றைகள் குறைந்து செல்­வ­தற்கு வழி­வ­குப்­ப­துடன், அவர்­களின் உட­லியல் திறன்­களும் குறை­வ­டைந்து செல்­கின்­றன.

பார­தூ­ர­மல்­லாத பிரச்­ச­ினைகள் கூட அவர்­களை எளிதில் பாதிப்­பிற்­குள்­ளாக்கி, பாரிய பிரச்­ச­னை­க­ளுக்கு வழி­கோ­லு­வ­துடன், அதன்விளை­வாக பல்­வேறு பிரச்­ச­னைகள் ஒட்­டு­மொத்­த­மாக அதி­க­ரிக்­கின்­றன. இந்த வியா­தி­களை நிர்­வ­கிப்­ப­தற்கு நோயா­ளர்கள் முதலில் ஒரு முழு­மை­யான முதுமை நோய் மதிப்­பீட்டு நடை­மு­றைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர். இதன் மூல­மாக மருத்­து­வ­ரீ­தி­யா­கவும், உட­லியல் மற்றும் தொழிற்­பாட்டு ரீதி­யா­கவும் உள்ள பிரச்­சி­னைகள் மதிப்­பீடு செய்­யப்­பட்டு, அவற்றை நிர்­வ­கிப்­ப­தற்­கான நடை­முறை இலக்­குகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அதன் பின்னர் முதுமை சிகிச்சை வைத்­திய நிபு­ணரின் வழி­காட்­ட­லுடன், பல்­வே­று­பட்ட தொழில் சார் வல்­லு­நர்­களின் பங்­க­ளிப்­புடன் பரா­ம­ரிப்பு மற்றும் சிகிச்சை என்­பன முன்­னெ­டுக்­கப்­பட்டு, நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றது.

முது­மை­ய­டை­வதால் ஏற்­படும் பிரச்­ச­னைகள் பொது­வாக முதி­யோரைப் பாதிக்­கின்ற போதிலும், வாழ்வில் நோய்கள் மற்றும் இய­லாமை கார­ண­மாக உடல் இருப்­புக்கள் வெறு­மை­யாகி அதன் கார­ண­மாக வயது வேறு­பா­டின்றி வளர்ந்­த­வர்கள் மத்­தி­யிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58