தேர்தலை பிற்போட்டு பலவீனத்தை வெளிக்காட்டுகின்றனர் - கெஹலிய

Published By: Vishnu

26 Jul, 2018 | 12:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தாது பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

மாகாண சபை தேர்தலை  பழைய முறைமையிலே நடத்த  அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  வாக்குகளை தம் பக்கம் திருப்பிக் கொள்ள அரசாங்கம் நுணுக்கமான முறையில் தேர்தல் திருத்தச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து புதிய தேர்தல் முறைமையினை நடைமுறைப்படுத்தியது. ஆனால்  அரசாங்கத்தின்  எதிர்பார்ப்பு அரசாங்கத்துக்கே எதிராக அமைந்தது.

இந் நிலையில் வடமாகாணம் தவிர்ந்து ஏனைய ஐந்து மாகாணங்களுக்கு தேர்தலை நடத்த  எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  வட மாகாண  சபை தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் ஏனெனில்  அம் மாகாணத்திலே பாரிய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் காணப்படுகின்றது.  

ஆறு மாகாண  சபைகளின் பதவி காலம் முடிவடைந்துள்ளது.  குறிப்பாக  வடக்கு  மாகாண சபையே தற்போது தேர்தலை வேண்டி நிற்கின்றது.   அங்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். ஆனால் அரசாங்கம் வடக்கு மாகாண சபை தேர்தலை  பிற்போட முயற்சிப்பது   அதன் நிர்வாக பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47