(இராஜதுரை ஹஷான்)

புகையிரத தொழிற்சங்க அதிகாரிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தமது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத் தருவதற்கு காலதாமதம் ஆவதனாலேயே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். 

அத்துடன் இதற்கு முன்னர் எமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவதாக கூறி அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர் எனினும் இதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.