இந்தியாவின் மணிப்பூரில் இருந்து டெல்லி சென்ற ஏர்-ஆசியா விமானத்தில் 19 வயது விளையாட்டு வீராங்கனை தான் பெற்ற குழந்தையை கழிவறையில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர்-ஆசியா விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமான ஊழியர்கள் கழிவறையில் சோதனை செய்தனர்.

அதன்போது கழிவறையில் பிறந்து சில மணி நேரமான வளர்ச்சி முழுமை அடையாத நிலையில்  சிசு ஒன்று. இறந்து கிடந்துள்ளது. இந்நிலையில் பெண் பயணி ஒருவர் கழிவறையில் சிசுவை பெற்றெடுத்து வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விமானம் தரையிறங்கியதும் பயணிகளிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதனால் பெண் பயணிகள் விமானத்துக்குள்ளே வைக்கப்பட்டு பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விமானத்தில் பயணம் செய்த 19 வயது பெண் விளையாட்டு வீராங்கனை, தான் சிசுவை பெற்றெடுத்து கழிவறையில் வீசியதாக கூறினார். இதையடுத்து அவரை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விமான நிலைய பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில், தீவிர விசாரணைக்கு பின் 19 வயது விளையாட்டு வீராங்கனை விமான கழிவறையில் குழந்தையை பெற்று சிசுவை வீசியதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக. மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் விமான கழிவறையில் சிசு வீசப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என ஏர் ஆசியா விமான நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பம் அடைந்த 19 வயது பெண் அதை மறைப்பதற்காக சிசுவை வெளியே எடுத்து கழிவறையில் வீசி விட்டு தப்ப முடிவு செய்து இருப்பது தெரிய வந்தது.