கட்­டி­லி­லேயே வாழ்நாளை தொலைத்தும், சாதனைகள் பல புரிந்த பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார்

Published By: J.G.Stephan

26 Jul, 2018 | 09:10 AM
image

தர்கா நகரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் தனது 37 ஆவது வயதில் நேற்றுக் கால­மானார்.

அன்­னாரின் ஜனாஸா தொழு­கையும் நல்­ல­டக்­கமும் இன்று காலை 9 மணிக்கு தர்கா நகர் தெருப் பள்­ளி­வா­சலில் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரும்பு சஞ்­சி­கையின் ஆசி­ரி­யரும் பிர­பல எழுத்­தா­ள­ரு­மான ஹாபிஸ் இஸ்­ஸ­தீனின் புதல்­வ­ரான இவர், Duchenne Muscular Dystrophy (DMD) எனும் அரி­ய­வகை நோயினால் தனது 4 வய­தி­லி­ருந்து பாதிக்­கப்­பட்­டி­ருந்தார்.

இர்பான் ஹாபிஸ், தனது 18 வய­தி­லி­ருந்து எழுந்து நட­மாட முடி­யாத நிலையில் கட்­டி­லி­லேயே தனது வாழ்வைக் கழித்து வந்தார்.

மிகுந்த திற­மையும் விடா முயற்­சியும் கொண்ட இவர், இது­வரை Silent Thoughts, Moments of Merriment , Silent Struggle எனும் மூன்று நூல்­களை ஆங்­கில மொழியில் வெளி­யிட்­டுள்ளார். தனது நான்­கா­வது நூலையும் எழுதிக் கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே இவர் எம்­மை­விட்டும் பிரிந்­துள்ளார்.

தனது சொந்த முயற்­சி­யாலும் தந்தை மற்றும் குடும்­பத்­தி­னரின் ஒத்­து­ழைப்­பாலும் ஆங்­கில மொழியைப் பயின்று கொண்ட இவர், குறித்த நோயினால் முழு உடலும் இயக்­க­மற்­றி­ருந்த நிலையில் தனது ஒரு விரலை மாத்­திரம் பயன்­ப­டுத்தி மடிக்­க­ணி­னி­யிலும் கைய­டக்கத் தொலை­பே­சி­யிலும் தட்­டச்சு செய்தே மேற்­படி மூன்று நூல்­க­ளையும் எழு­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கடந்த மே மாத இறு­தியில் Nas Daily எனும் சர்­வ­தேச ஊடகம் இர்பான் ஹாபிஸ் தொடர்பில் வெளி­யிட்ட 1 நிமிட வீடியோ தொகுப்பின் மூலம் இவர் சர்­வ­தேச அளவில் பிர­பல்யம் பெற்­றி­ருந்தார்.

இந்த வீடியோ வெளி­யி­டப்­பட்ட முதல் 4 நாட்­களில் மாத்­திரம் 1 கோடி தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டி­ருந்­தது. நேற்று அவர் மரணிக்கும் வரை குறித்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 75 இலட்சத்தை தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் எழுதிய புத்தகங்கள்..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47