வவுனியா செட்டிக்குளம் - சண்முகபுரத்தில் இன்று  அதிகாலை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபரொருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

70 வயதான சுப்பையா பொன்னையா என்பவர்   தனது  வீட்டு காணிக்குள்  சத்தம் ஏதோ கேட்பதை உணர்ந்து வீட்டிற்கு வெளியே  சென்ற சமயத்தில் காட்டு யானையின் தாக்குலுக்கு உள்ளாகியுள்ளார். அவரின் சத்தம் கேட்ட  அயலவர்கள் அவரை மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் , ஓமந்தை , நெடுங்கேணி, ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளின் காட்டு யானைகள் மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்புக்களையும் சேதமாக்குகின்றது.

செட்டிக்குளத்தில் கடந்த மூன்று  மாதத்தினுள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.