(எம்.நேச­மணி)

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் ரின்­மீன்­க­ளுக்­கான இறக்­கு­மதி வரி­யை அதி­க­ரித்து உள்­நாட்டு ரின்மீன் உற்­பத்­தி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென இலங்கை ரின்மீன் உற்­பத்­தி­யாளர் சங்­கத்தின் செய­லாளர் கமல் அத்­த­னா­ரச்சி கோரிக்கை விடுத்தார்.

இத் தொழில்­து­றையை பாது­காப்­பதன் மூலம் இத்­தொ­ழில்­து­றை­யுடன் தொடர்­பு­டைய பலரும் குறிப்­பாக எமது மீனவ சமூகம் பாரிய நன்­மை­ய­டை­யு­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.

ரின்மீன் உற்­பத்­தி­யாளர் சங்­கத்தின் காரி­யா­ல­யத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்­டின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது, 

இறக்­கு­மதி செய்­யப்­படும் ரின்­மீன்­க­ளுக்­கான இறக்­கு­மதி வரி­யை அர­சாங்கம் அண்­மையில் குறைத்­தது. அதே­போன்று தற்­போது சந்­தையில் மீன் விலை அதி­க­ரித்­துள்­ளது. இவை இரண்டும் உள்­நாட்டு டின்மீன் உற்­பத்­தி­யா­ளர்­களை பெரிதும் பாதித்­துள்­ளது.

பொதுமக்கள் தரம் என்­ப­வற்­றுக்கு அப்பால் விலை­யையே கருத்தில் கொள்­கின்­றனர். ஆகையால் எமது ரின்­மீன்­களை விட குறை­வான விலைக்கு ரின்­மீன்கள் கிடைத்தால் மக்கள் அத­னையே அதிகம் கொள்­வ­னவு செய்­வார்கள். எனவே நாம் வெளி­நா­டு­களிலிருந்து இறக்­கு­மதி செய்ய வேண்டாம் என்று கோர­வில்லை. இறக்­கு­மதி வரி­யை ஏற்­க­னவே இருந்­த­வாறு அற­வி­டு­மாறே கோரு­கின்றோம். அப்­போதுதான் விற்பனையாளர்­களால் எமது ரின்­மீன்­களின் விலை­யை­விட குறைத்து விற்­க­மு­டி­யாது. 

இவ்­வா­றான சம­யத்தில் மக்கள் தமக்கு வேண்­டிய ரின்மீன் வகை­களை கொள்­வ­னவு செய்­வார்கள். உள்­நாட்டில் ரின்மீன் உற்­பத்­தியில் 4 நிறு­வ­னங்கள் ஈடு­பட்­டுள்­ளன. அவற்றின் உற்­பத்­திகள் தர­மான நிலையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­போது சரி­யான சந்தை வாய்ப்பை பெற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ளது. இதற்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் ரின்­மீன்கள் குறைந்த விலையில் கிடைப்­பதே காரணமாகும்.

எமது நாட்டில் சிறந்த கடல் வளம் காணப்­ப­டு­கி­றது. எனவே இந்த தொழில்­து­றையை பாது­காப்­பதன் மூலம் மீன­வர்­களும் நன்­மை­ய­டை­வார்கள். நாட்டின் தேசிய உற்­பத்­தியும் வரு­மா­னமும் கூட அதி­க­ரிக்கும். அது மாத்­திரமல்­லாமல் ரின்மீன்­க­ளுக்­கான லேபல், ரின்கள் உற்­பத்தி செயற்­பா­டு­க­ளுக்­கான மின்­சாரம், எரி­பொருள் அனைத்தும் எமது நாட்­டி­லி­ருந்தே பெறப்­ப­டு­கி­றது. மேலும் பல தரப்­பினர் இதனால் நன்­மை­ய­டைவர்.

வெளி­நா­டு­களிலிருந்து அள­வுக்கு அதி­க­மாக ரின்­மீன்கள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தா­லேயே எமது தொழில்­துறை பாதிப்பை எதிர்­நோக்­கு­கி­றது. எம்மால் சந்­தைக்கு தேவை­யான அளவு ரின்­மீன்­களை வழங்க முடியும். அதற்குத் தடை­யாக உள்ள கார­ணி­களை நீக்கி எமக்கு அர­சாங்கம் உத­வ­வேண்டும்.

ரின்மீன் உற்­பத்­தியில் முத­லீ­டு செய்­வ­தற்கு சீன நிறு­வ­னங்­க­ளுக்கு அழைப்பு விடுப்­ப­தாக அண்­மையில் செய்­திகள் வெளி­யா­கின. இதன் பாதகத் தன்­மை­யை அர­சாங்கம் விளங்­கிக்­கொள்ள வேண்டும். வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களை வர­வேண்டாம் என்று நாம் சொல்­ல­வில்லை. ஆனால் உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­களை முதலில் பாதுகாக்க வேண்டும்.

இத்துறை தொடர்பில் சரியான திட்டம் வகுக்கப்படுமானால் எம்மால் உள்நாட்டு சந்தைக்கு ரின்மீன்களை வழங்க முடிவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். எனவே இறக்குமதி செலவினங்களை குறைத்து வர்த்தக நிலுவையையும் அரசாங்கத்தால் குறைக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.