(எம்.எப்.எம்.பஸீர்)

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், பெண் ஒருவர் மீதும் அவ­ரது 16 வயது மகள் மீதும் தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் கட­வத்தை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். 

தாக்­கு­த­லுக்கு உள்­ளா­ன­தாக கூற­ப்படும் பெண் வழங்­கிய முறைப்­பாட்­டுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர்  இந்த தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­டுள்­ளமை உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன. இந்­நி­லை­யி­லேயே குறித்த பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் முறைப்­பாட்­டுக்கு அமைய இது குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,

கடந்த 21 ஆம் திகதி இரவு வேளையில் பெண்­ணொ­ருவர் தனது கணவர் செலுத்­திய  சிறிய ரக லொறி­யொன்றில் 16 வயது மக­ளுடன் பய­ணித்­துள்ளார். இதன்­போது என்­டே­ர­முல்ல, ஜூட் மாவத்தை பகு­தியில், லொறியை செலுத்­திய கணவன் உட­னடி தேவை­யொன்றின் நிமித்தம் லொறியை வீதியின் ஓர­மாக நிறுத்­தி­விட்டு சென்­றுள்ளார். 

இதன்­போது லொறி நிறுத்­தப்­பட்­டதால் குறுக்­காக சிக்­கி­யுள்ள காரொன்­றுக்குள் இருந்து ஒருவர், லொறியை முன்­னோக்கி செலுத்­து­மாறு கட்­ட­ளை­யிட்­டுள்ளார். இதன் ­போது லொறியை செலுத்­திய தனது கணவர் தேவை­யொன்­றுக்­காக சென்­றுள்­ள­தா­கவும், அவர் அவ­ச­ர­மாக வந்­ததும் முன்­னோக்கி எடுப்­ப­தா­கவும் லொறியில் இருந்த பெண் கூறி­யுள்ளார். 

இதன்­போது காரில் இருந்து இறங்கி வந்­துள்ள அந்த நபர், தான் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எனக் கூறி கடும் தொனியில் அப்­பெண்ணை எச்­ச­ரித்­துள்­ள­துடன்,  அதன்­போது ஏற்­பட்ட வாக்கு வாதத்தில் அப்பெண் மீதும் அவ­ரது  16 வயது மகள் மீதும் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

இந்த தாக­்குதல் தொடர்பில் குறித்த பெண் ராகம போதனா  வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்­சையும் பெற்றுக்கொண்டுள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையிலேயே கடவத்தை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.