(எம்.சி.நஜிமுதீன்)

ஏனைய மாகாண சபைகளின் தேர்தலை பிற்போடுவது போன்று  வடக்கு மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் பலம் அரசாங்கத்திற்கில்லை என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார். 

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவத்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து நீண்ட காலம் சென்றுள்ள போதிலும் தேர்தல் நடத்தப்படவில்லை. அதேபோல் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக் காலம் விரைவில்  நிறைவடையுவுள்ளது. 

வடக்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும். ஏனெனில் வட முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு நல்லாட்சி அரசாங்கம் அச்ச நிலையில் உள்ளது. அத்துடன் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தேர்தலை நடத்தாது தொடர்ந்தும் விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியில் இருப்பதற்கு எதிர்பார்ப்பாராயின் அது இயலாத காரியமாகும் என்றார்.