மூத்த நடிகையும், வீடு பட புகழ் நாயகியுமான அர்ச்சனா, ‘சீதக்காதி’ என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் சீதக்காதி என்ற படத்தில் எண்பது வயது மதிக்கத்தக்க நாடக கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கிறார். 

இவருக்கு ஜோடியாக வீடு புகழ் நடிகை அர்ச்சனா நடிக்கிறார். இவருடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி ஆகியோர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்கள். அதே போல் மற்றொரு முக்கியமான வேடத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கிறார்.

கோவிந்த மேனன் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி எண்பது வயது மதிக்கத்தக்கவராக தோற்றம் பெறும் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

‘கேணி ’ என்ற படத்தைத் தொடர்ந்து மூத்த நடிகை அர்ச்சனா நடிக்கும் இந்த படத்தைக் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதனிடையே தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகள் ஈஸ்வரி ராவ், சிம்ரன், அர்ச்சனா ஆகியோர் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.