(க.கிஷாந்தன்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி நோர்வூட் – ரொக்வூட் பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 நேற்று இரவு 7.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க சென்றபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 விபத்தில் லொறியின் சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 குறித்த லொறி மஸ்கெலியா பகுதியிலிருந்து அட்டன் - கொட்டகலை பகுதிக்கு யோகட் வகைகளை ஏற்றிச்சென்றமை குறிப்பிடதக்கது.