எகிப்து பாராளுமன்றத்தின் விஷேட அழைப்பின் பேரில் சபாநாயகரின் தலைமையிலான 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய  விஷேட குழு கெய்ரோ நகரை நோக்கி சென்றுள்ளது.

குறித்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற தொடர்பை உறுதிப்படுத்த உள்ளதுடன் இரு நாட்டினதும் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் பல சுற்றுகளாக நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை சபாநாயகர் மற்றும் எகிப்து பிரதமர் முஸ்தபா மெக்பூலியுடனும் எகிப்தின் பிரபல அமைச்சர்களுடனும் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த குழுவில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சரான கயந்த கருணாதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான ஜே.சி. அலவத்துவல, ரஞ்சித் அலுவிஹார, ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர் எட்வட் குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த யாப்பா அபேவர்தன, அனுர சிட்னி ஜயரத்ன, எம்.ஐ.எம். மன்சூர், ஹெக்டர் ஹப்புஹாமி, அரவிந்த குமார் மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் நீல் இந்தவல ஆகியோர் அடங்குகின்றனர்.