காட்டுத்தீயில் சிக்குண்டு தேனிலவுக்கு சென்ற புதுமணப்பெண் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கிரேக்கத்தின் ஏதென்ஸ் அருகே உள்ள கடற்கரை பகுதியில் பரவிய குறித்த காட்டுத்தீயினால் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கிரேக்கத்தில் தேனிலவுக்கு சென்ற புதுமணத்தம்பதிகளுக்கு ஏற்பட்ட பெருந்துயரம் தொடர்பான தகவல் இணையத்தில் பரவி வருகின்றது.

கடந்த வியாழக்கிழமை அயர்லாந்தில் வைத்து ஜோ ஹோலோன் மற்றும் பிரையன் ஓ'கல்லாகன்-வெஸ்டிராப் ஆகிய தம்பதிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் தங்கள் தேனிலவை கிரேக்கத்தின் மடி (Mati) பகுதியில் கொண்டாட முடிவு செய்து அங்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காட்டுத்தீயில் சிக்கிய தம்பதிகள் அங்கிருந்து தங்கள் வாகனத்தில் வெளியேற முயற்சித்துள்ளனர்.

ஆனால் ஜோ ஹோலோன் தீயில் சிக்கியதாகவும், உடலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே குறித்த காட்டுத்தீயில் சிக்கிய பிரையன் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.