நீதிமன்றத்தல் விடுதலை செய்யப்பட்டுள்ள 18 தமிழக மீவர்களும் இன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மீன்பிடி திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். 

இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த மீனவர்களை யாழ். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் அவர்களை எச்சரிக்கையுடன் விடுவித்தார். அத்துடன் மேலும் இரு தமிழக மீனவர்களும் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த 18 மீனவர்களையும் இன்றைய தினம் தமிழகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.