(நா.தனுஜா, ஆர்.விதுஷா ரோஜனா)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார அரசியலுக்கு வந்தால் முழுமையான ஆதரவு வழங்குவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

தேசிய அரசியலுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் அவரே தேவையானவர். எனவே அவர் வருவாராயின் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் அவர்  குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.