மரணித்த தனது நண்பனை மீட்க கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன் முறையினை பயன்படுத்தி முயற்சி செய்த குரங்கின் காணொளி இணையத்தில் பரவி வருகின்றது.

மின் கம்பத்தின் ஊடாக பயணிக்க முயற்சித்த குரங்கு ஒன்று மின்தாக்கி மரணமடைந்துள்ளது.

தன்னுடைய நண்பன் மரணித்ததினை உணராத மற்றைய குரங்கு மனிதர்கள் பயன்படுத்தும் சிபிஆர் என்ற (கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன்முறையினை பயன்படுத்தும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் பரவி வருகின்றது.

இந்தியாவில், கார்கோனே என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குரங்கு பலமுறை சிபிஆர் முறையினை பயன்படுத்தி தனது நண்பனை உயிருடன் மீட்க முயற்சித்ததாக அப்பிரதேசத்தினை சேர்ந்த நபரொருவர் தெரிவித்தார்.

மேலும், அவ்விடத்தில் திரண்ட குரங்குகள் சுமார் ஒரு மணித்தியாலங்களாக அவ்விடத்திலேயே இருந்ததாவும், அவைகள் சென்ற பின் மரணித்த குரங்கினை அப்பிரதேசவாசிகள் எரித்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.