(நா.தனுஜா, ஆர்.விதுஷா ரோஜனா)

வடக்கில் சீனா விடுகளை அமைப்பதற்கு இந்தியா விரும்பவில்லை என அமைச்சரவைப் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கைக்கான 50 ஆயிரம் இந்திய வீட்டு திட்டத்தில் பெறும்தொகையான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.2 மில்லியன் செலவிலேயே இந்தியா வீடொன்றினை கட்டுகின்றது. ஆனால் சீனா 1.3 மில்லியனுக்கு வடக்கில் வீடுகளை அமைக்க முன்வந்துள்ளது. எனவே தான் அமைச்சர் சுவாமிநாதன் சீன வீட்டு திட்டம் குறித்து கவனம் செலுத்தினார். 

ஆனால் இங்கு இருப்பது இராஜதந்திர பிரச்சினையாகும். எனவே பிரதமர் இந்த விடயத்தை இரு தரப்புடனும் பேசி இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர உள்ளார் என தெரிவித்தார்.