இரணைமடுக்குளம் பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத 17 வயதுடைய இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, கூமாம்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வீரவாகு புரணம் என்பவர் ஆவார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கிளிநொச்சியில் உள்ள தனது மகளது வீட்டிலிருந்து வவுனியா செல்லும் முகமாக இரணைமடு வீதியால் பஸ்தரிப்பிடம் நோக்கி

செல்கையில் எதிரே வந்த மோட்டார் சைக்களில் மோதியதில் படுகாயமடைந்த அப் பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கான சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான  சுதர்சன் றஜீவனை கைதுசெய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.