தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி விஜயம்

Published By: Daya

25 Jul, 2018 | 11:05 AM
image

சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவைக்கு மட்டும் உரித்தானதல்ல, இது எமது நாட்டுக்கு கிடைத்த வைத்தியசாலையாகும். முழு நாட்டு மக்களுக்காகவும் குறித்த வைத்தியசாலை பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படுகின்றது. பதினாறரை ஏக்கர் நிலப்பரப்பில் 1200 கோடி ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடியதாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

எமது நாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பெரும்பாலான வைத்தியசாலைகள் நகரின் மத்தியிலேயே அமைந்துள்ளன என்றாலும், உலகில் பெரும்பாலான நாடுகளில் வைத்தியசாலைகள் நகரங்களுக்கு வெளியிலேயே அமைந்துள்ளன. 

அந்த வகையில் இந்த வைத்தியசாலையை இப்பிரதேசத்தில் நிர்மாணிக்கக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இப்பிரதேசத்தில் துப்பரவு பணிகளை மேற்கொள்கின்றபோது தொல்பொருள் பிரதேசம் ஒன்றும் சிறியதோர் வனப்பகுதியும் தூபியும் காணப்பட்டது. 

இந்த தொல்பொருள் பிரதேசத்திற்குரிய தொன்மை அம்சங்களை பேணி இந்த வைத்தியசாலை நோயாளிகளுக்கு சமய கடமைகளை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான இடமொன்றையும் நிர்மாணிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். 

இலங்கை மக்களுக்காக இந்த அன்பளிப்பை செய்தமைக்காக சீன ஜனாதிபதி ஷிங் ஜிங் பிங்க்கும் சீன மக்கள் குடியரசுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன். 2015ஆம் ஆண்டு நான் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றின்போது முன்வைத்த கோரிக்கையின்பேரில் இந்த வைத்தியசாலையை எமது நாட்டுக்கு பெற்றுத்தந்தமை தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில் நான் விசேட நன்றியை தெரிவிக்கின்றேன். 

நாம் ஏழு மாதங்களுக்கு முன்னர் இந்த காணியை நிர்மாணப் பணிகளுக்காக கையளித்தோம். இக்காலப் பகுதியில் நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் அங்குள்ள நிறுவனங்களிடம் விலைமனு கோரியிருந்தனர். எமது நாட்டைப் போலன்றி அங்கு அந்த நடைமுறைகள் மிகவும் இறுக்கமாக பேணப்படுகின்றமையால் அதற்கு போதுமான காலம் தேவைப்பட்டது. 

நாட்டின் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக இந்த வைத்தியசாலையை எமது நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 

அதேபோன்று இங்கு வந்திருக்கும் சீன தூதுவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் எனது இல்லத்திற்கு வருகைதந்து இந்த நிகழ்வுபற்றி கலந்துரையாடினார். அதன்போது நான் உங்களுக்கு இன்னுமொரு அன்பளிப்பையும் எடுத்து  வந்துள்ளேன்.  சீன  ஜனாதிபதி ஷிங் ஜிங் பிங் அவர்கள் உங்களுக்கு அன்பளிப்பொன்றை தந்திருக்கின்றார். 2 பில்லியன் யுவான்களை உங்களது விருப்பத்தின்பேரில் எந்தவொன்றையும் செய்துகொள்வதற்காக இதனை வழங்கும்படி கூறினார் என்று கூறிய அவர் என்னிடம் ஒரு வாரத்தில் அதற்கான திட்ட அறிக்கை வேண்டுமெனக் கூறினார். நான் அப்போதே பொருளாதார விவகார ஆலோசகரை தொடர்புகொண்டு சீன அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கு 2 பில்லியன் யுவானுக்கான திட்ட அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு கூறினேன். 2 பில்லியன் யுவான் என்பது இலங்கை ரூபாவில் 48 பில்லியன்களாகும். அதாவது 4,800 கோடிகளாகும். இதனை கொண்டு என்ன செய்வது என நான் எண்ணிக்கொண்டிருந்தபோது நாடளாவிய ரீதியில் வீடமைப்பு திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது நல்லதென்று எனக்கு தோன்றியது. 

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த தொகையைக்கொண்டு வீடமைப்பதற்கான திட்டமொன்றை தயாரித்து சீனாவிடம் வழங்கவுள்ளேன். ஒரு வீட்டுக்கு 10 இலட்சம் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. 

ஒரே திட்டத்திற்கமைவாக முழு இலங்கையிலும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வீடமைப்பதற்கு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். இந்த நிதியை வழங்கியமை தொடர்பில் சீன தூதுவருக்கும் சீன அரசாங்கத்திற்கும் சீன ஜனாதிபதிக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.

நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கான பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், பௌதீக வள அபிவிருத்தி மற்றும்  ஆன்மீக முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றன. ஆன்மீக மேம்பாட்டின் மூலமாக ஒழுக்கமிக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அவ்வகையான சமூகத்தை எவ்வாறான முறைகளை கையாண்டாவது உருவாக்குவதானது காலத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55