பலாலி விமானத்தளக் காணி குறித்து விக்கி கடிதம்

Published By: Daya

25 Jul, 2018 | 09:59 AM
image

கொழும்பு சிவில் விமான இயக்கியல் திணைக்களப் பணிப்பாளருக்கு (Director, Civil Aviation)  வடமாகாண முதலமைச்சரால் பலாலி விமானத்தளக் காணி கையேற்பு சம்பந்தமாகக் கடிதம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டது. 

 பிரதி அமைச்சர் சென்றதடவை வந்த போது மேற்படி காணி கையகப்படுத்துவது சம்பந்தமாக உரிய நிறுவனத்துடன் பேசித் தீர்க்குமாறு கூறியதன் காரணத்தினால் தான் மேற்படி கடிதம் அனுப்பப்பட்டது.

அதில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

விமானத்தளத்திற்கான காணி முதலில் 1950ஆம் ஆண்டு விமான இயக்கியல் திணைக்களத்தினால் கையேற்கப்பட்டது. மொத்தமாக 456 காணித் துண்டுகள் கையேற்கப்பட்டன. அவற்றின் மொத்த விஸ்தீரணம் 349 ஏக்கர் 3 ரூட்ஸ் 35.9 பேர்சர்ஸ் (141.62 ஹெக்டயர்கள்). அதனுடைய பூர்வாங்க வரைபட இலக்கம் 1579.

அதன் பின் 1986ஆம் ஆண்டில் காணி கையேற்புச் சட்டத்தின் பிரிவு 2இன் கீழ் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட காணிகளையும் சேர்த்து மேலதிக காணிகளை பலாலி விமானத்தள விஸ்தரிப்புக்காக அவசரகாலச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு கையேற்பதாக அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது. குறித்த கையேற்பின் கீழ் அடையாளப்படுத்தப்பட்ட காணி 426 ஏக்கர் 00 ரூட் 32.3 பேர்ச்சர்ஸ் (172.4778 ஹெக்டயர்கள்) விஸ்தீரணம் கொண்டது. இந்தக் காணி முன்னர் குறிப்பிடப்பட்ட 349 ஏக்கர் 3 ரூட் 35.90 பேர்ச்சர்ஸ் காணியையும் அதனுள் அடக்கியிருந்தது. 

1987ஆம் ஆண்டில் மேலும் 646 ஏக்கர் 3 ரூட் 24.04 பேர்ச்சர்ஸ் காணி இராணுவத்தால் கையகப்படுத்துவதாக பிரிவு 38(a) இன் கீழ் அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது. பிரிவு 5இன் கீழான அறிவித்தல் 1999ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. ஆகவே கையகப்படுத்த கோரப்பட்ட காணிகளின் மொத்த விஸ்தீரணம் 349 ஏக்கர் 3 ரூட்ஸ் 35.90 பேர்ச்சர்ஸ் + 646 ஏக்கர் 3 ரூட்ஸ் 24 பேர்ச்சர்ஸ் ஸ்ரீ 996 ஏக்கர் 3 ரூட் 19.90 பேர்ச்சர்ஸ்.

இவற்றை விட மேலும் 6500 ஏக்கர் காணி மேலதிகமாக படையினரால் கையேற்கப்பட்டுள்ளன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் பலாலி விமானத்தள விஸ்தரிப்புக்காக மேலதிகக் காணி கையகப்படுத்த முடியாது. ஏனென்றால் அதில் ஒரு பகுதி விமான இயக்கியல் திணைக்களத்தினால் ஏற்கெனவே 1950இல் கையேற்கப்பட்டுவிட்டது. விமானத்தள விஸ்தரிப்புக்கான காணி விமான இயக்கியல் திணைக்களத்தினால் தான் கையகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக மேற்படி பணிப்பாளருக்கு வடமாகாண முதலமைச்சர் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

1. மேற்குறிப்பிட்ட 349 ஏக்கர் 3 ரூட் 35.9 பேர்ச்சர்ஸ் காணியை படையினர் உடனேயே விமானங்கள் இயக்கியல் திணைக்களத்திற்குக் கையளிக்க வேண்டும். 

2. மேலதிகமாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் விமானத்தளம் அமைப்பதற்காகக் கையேற்கப்பட்ட காணிகளை உடனேயே பணிப்பாளரிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோர வேண்டியது அவசியம்.

3. குறித்த காணிகள் பணிப்பாளரிடம் கையளித்த பின் இந்திய அரசிடம் இருந்து பலாலி விமானத்தளத்தை அமைப்பதற்குத் தேவையான காணி எவ்வளவு என்று அறிந்து அதனைக் கைவசம் வைத்துக் கொண்டு மிகுதிக் காணிகளை காணிச் சொந்தக்காரரிடம் கையளிக்க வேண்டும். 

குறித்த 349 ஏக்கர் 3 ரூட் 35.9 பேர்ச்சர்ஸ் காணிக்கு மேலதிகமாக காணி ஏதும் தேவையாக இருப்பின் அதற்கான கையேற்பு நடவடிக்கைகளைப் புதிதாகத் தொடங்க வேண்டும். 

எனவே மூலக் காணி விமான இயக்கியல் திணைக்களத்திற்கு உரித்தாகி இருந்தபடியால் மேலதிகக் காணிகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் சட்ட உரித்து அந்தத் திணைக்களத்தையே சாரும் என்று பணிப்பாளருக்கு எடுத்துக் காட்டியுள்ளார். 

படையினர் தற்போது கையகப்படுத்தி வைத்திருக்கும் காணி சட்டத்திற்குப் புறம்பாக கையேற்கப்பட்டவையே என்று பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். 

அண்மையில் கௌரவ பிரதியமைச்சரின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்கா கௌரவ முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அநேக விடயங்கள் தமக்கு இதுவரை காலமும் தெரியாது இருந்தது என்பதையும் இப்பொழுது அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00