மெக்சிகோ நாட்டில் ஊடகவியலாளர்களை குறிவைத்து மீண்டும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் மேலும் ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.

மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் அமைந்துள்ள குயிண்டானா ரூ என்ற பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்தவர் ரூபன் பாட். இவர் அதே பகுதியில் இணைய தள பத்திரிகையை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ரூபன் பாட் நேற்று விடுதியில் தங்கியிருந்த. போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் ரூபனை சரமாரியாக சுட்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் ரூபன் சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த ஒரு மாத காலத்தில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே ரூபன் பாட்டுக்கு கொலை மிரட்டல்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.