வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனாவை பகுதியில் இன்று அதிகாலை பஸ் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து பூனாவை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அருகேயுள்ள மரத்துடன் மோதியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ் விபத்தில் படுகாயமடைந்த 19 பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்