(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் இன்று புதன்­கி­ழமை காலை நடை பெறவுள்­ளது.

இதன்­போது மாகாண சபை தேர்­தல்கள் உட்­பட சம­கால அர­சியல் நிலைவ­ரங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் தீர்க்­க­மான முடி­வுகள் சில எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்டம் இன்று காலை கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் கூட­வுள்­ளது. 

இந்த கூட்­டத்தில் கட்­சியின் பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, பொதுச்­செ­ய­லாளர் அகிலவிராஜ் காரி­ய­வசம், தவி­சாளர் கபீர் ஹாஷிம் உட்­பட கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்கள் பலரும் கலந்துகொள்­ள­வுள்­ளனர். 

இந்த கூட்­டத்தின் போது சம­கால அர­சியல் விவ­கா­ரங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளன. குறிப்­பாக மாகாண சபை தேர்­தலை எந்த முறை­மையின் கீழ் நடத்­து­வது என்பது குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அந்த தீர்­மானம் கட்சி தலை­வர்கள் கூட்­டத்­திலும் முன்­வைக்­கப்­படக் கூடும்.

அத்­துடன் சர்ச்­சை­க்கு­ரிய கருத்­தினை தெரி­வித்த முன் னாள் பிரதி அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தொடர்­பாக இந்த செயற்­குழு கூட்­டத்தில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்­பாக கட்­சி­யினால் நிய­மிக்­கப்­பட்ட ஒழுக்­காற்று விசா­ரணை குழுவின் தீர்­மானம் அறி­விக்­கப்­பட கூடும் என எதிர்­பார்க்­க­ப்ப­டு­கின்­றது. 

அதனைத் தவிர இன்னும் பல அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படவுள் ளதாக தெரியவருகின்றது.