ஆசி­யக்­கிண்ணத் தொடரில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டி யில் நடு­வரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரி­வித்­ததால் விராட் கோஹ்­லிக்கு ஐ.சி.சி அப­ராதம் விதித்­துள்­ளது.

ஆசியக் ­கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்­தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மிர்­பூரில் நடந்­தது.

இந்தப் போட்­டியில் கோஹ்லி மொஹமது சமி பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்­ட­மி­ழந்தார். ஆனால் பந்து தனது துடுப்­பாட்ட மட்­டை யில் உரசிச் சென்­றதை நடு­வ­ரிடம் துடுப்­பாட்ட மட்­டையை உயர்த்திக் காட்­டினார்.

மேலும், சில தகாத வார்த்­தை­க­ளையும் அவர் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். இது ஐ.சி.சி.யின் நடத்தை விதி­மு­றை­க­ளுக்கு எதி­ரா­னது. அவர் தனது தவறை ஏற்றுக் கொண்­டுள்ள நிலையில், அவ­ருக்கு போட் டிக் கட்ட ணத்தில் 30 சத வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.