(இரா­ஜ­துரை ஹஷான்)

அர­சி­ய­ல­மைப்பு  வரைவு செயன்­மு­றை­களை  அர­சாங்கம் மந்­த­க­தி­யிலேயே  முன்­னெ­டுத்து வரு­கின்­றது.  அதனால் பாதிக்­கப்­ப­டு­வது தேசிய நல்­லி­ணக்க முயற்­சி­க­ளே­யாகும், அந்த முயற்­சிகள்  ஊக்கம் பெறவும் தேசிய   இனப்­பி­ரச்­சி­னை­க்கு அர­சியல் தீர்­வொன்றை காண்­ப­தற்கும்  விரை­வாக செயற்­பட்டு  அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்­பை கொண்டு வர வேண்டும் என்று தேசிய ஐக்­கிய மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான அமைப்பின்  தலை­வி­யான முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டார நாயக்க குமா­ர­துங்க  வலி­யு­றுத்­தினார்.

தேசிய சமா­தான பேர­வையின் சர்­வ­மத குழுவின்  ஏற்­பாட்டில் நேற்று  செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க  ஞாப­கார்த்த  சர்­வ­தே­ச  மாநாட்டு மண்­ட­பத்தில்  நடை­பெற்ற  கருத்­த­ரங்கில் பிர­தம விருந்­தி­னர்­க­ளாக  கலந்துகொண்ட  முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க  உரை­யாற்­ று­கை­யி­லேயே  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். போருக்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தி யில்  சமூ­கங்­க­ளுக்­கி­டையில்  நல்­லி­ணக்­கத்தை  துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு  முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய  செயன்­மு­றைகள் குறித்து ஆராய்­வதே இக்­க­ருத்­த­ரங்கின் நோக்­க­மாகும்.   சர்வ மதங்­க­ளையும் சேர்ந்த  மதத்­த­லை­வர்கள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் உள்­ளிட்டோர் இதில் கலந்­து­கொண்­டனர்.  

இலங்­கைக்­கான  ஜேர்மன் தூதுவர், தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்  மனோ கணேசன், தேசிய சமா­தான பேர­வையின் நிறை­வேற்று பணிப்­பாளர்  ஜெஹான் பெரேரா, ஆகி­யோரும்  கலந்துகொண்­டனர். நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான  பிரே­ர­ணைகள் அடங்­கிய  ஆவணம்  சர்­வ­மத குழு­வி­னரால்  இவ்­வே­ளையில்   முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

இங்கு  முன்னாள் ஜனா­தி­பதி  சந்­தி­ரிக்கா மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையின் பெரும்­பான்மை இன­மாக பௌத்த மக்கள் காணப்­ப­டு­கின்­றனர். பிர­ தான மத­மா­கவும் பௌத்த மதம் காணப்­ப­டு­கின்­றது.  ஆகவே பௌத்த மக்கள்  பிற மதங்­களை மதித்தால் தேசிய நல்­லி­ணக்கம் சுய­மா­கவே தோற்றம் பெறும். கடந்த காலங்­களில் இனங்­க­ளுக்­கி­டையில் பாரிய கசப்­பான சம்­ப­வங்கள் காணப்­பட்­டன. 30வருட கால­மாக நாட்டில் இடம் பெற்ற பயங்­க­ர­வாத யுத்­தத்தின் தாக்­கங்கள் இன்றும் தொடர்ந்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றன.

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இனங்­க­ளுக்­கி­டையில் தேசிய நல்­லி­ணக்­கத்­தை ஏற்­ப­டுத்த முயற்­சிகள் மேற்­கொண்­டாலும் அது எதிர்­பார்க்­கப்­பட்ட இலக்­கை  அடை­ய­வில்லை. அதா­வது தமிழ் மக்கள் தங்­க­ளது தாய்  மொழியில்  அரச திணைக்­க­ளங்­க­ளுக்கு விண்­ணப்­பங்­களை  அனுப்பும் போது அதற்­கான பதில்கள் சிங்கள மொழி­யிலேயே கிடைக்கப் பெறு­கின்­றன. இது அம்­மக்­க­ளுக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற பாரிய அநீ­தி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.

அரச திணைக்­க­ளங்­களில் மும்­மொழி தேர்ச்சி பெற்­ற­வர்­களின் பத­வி­க­ளுக்­கான பற்­றாக்­குறை காணப்­ப­டு­கின்­றமை மற்றும்  மொழித் தேர்ச்சி இன்மை போன்ற விட­யங் கள் இவ்­வி­ட­யத்தில்  பெரிதும் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன. தேசிய மொழி நல்­லி­ணக்கம் காணப்­ப­டா­மையே பயங்கரவாத யுத்தம் தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணமாகும். 

தமிழ் மக்கள்  ஒரு கட்­டத்தில் தங்­க­ளது உரி­மை­களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சமா­தான முறை­யிலே அர­சாங்­கத்­திற்கு  அழுத்­தங்­களை கொடுத்­தனர். ஆனால்  அர­சாங்­கத்தில் இருந்து எவ்­வித சாத­க­மான தீர்­வு­களும் கிடைக்­கா­ததால் அவர்கள் ஆயு­த­மேந்தி  போரா­டினர் இதில்  பல்­வேறு கார­ணிகள் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன.இதன் தாக்கம் 30 வருட கால­மாக தொடர்ந்­தது. இன்றும் தொடர்­கின்­றது.  அர­சாங்­கத்தில் ஒரு பிரி­வினர் அர­சியல் தீர்வு கோரி நிற்­கின்­றனர்.  சிறு­பான்மை மக்­களின்  அடிப்­படை உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்­டு­மாயின் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். 

இவ்­வி­ட­யத்தில் அர­சியல்  தர்க்­கங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள்    செயற்­ப­டாமல்  தேசிய நல்­லி­ணக்­கத்தை கருத்திற் கொண்டு அர­சி­யலில் செல்­வாக்கு செலுத்த வேண்டும்.  இன்று  சர்­வ­தே­சங்­களில் சாதிப்­ப­வர்கள் இலங்கைத்  தமி­ழர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர். இவர்கள் மீண்டும்  எமது நாட்­டுக்கு திரும்பி வர­ப்போ­வது கிடையாது. இதுவே எமது நாட்டுக்கு பாரிய இழப்பாகும். இருப்பவர்களையாவது  தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு  வரைபு செயன்முறைகளை  அரசாங்கம் மந்தகதியிலே  முன்னெடுத்து வருகின்றது.  அதனால் பாதிக்கப்படுவது தேசிய நல்லிணக்க முயற்சிகளேயாகும், அந்த முயற்சிகள்  ஊக்கம் பெறவும் தேசிய   இனப்பிரச்சினைகளுக்கு அரசியல் தீர் வொன்றை காண்பதற்கும்  விரைவாக செயற்பட்டு  அரசாங்கம் புதிய அரசியல மைப்பினை கொண்டு வர வேண்டும்  என் றார்.