பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே குழந்தைகள் தொடர்பான தகராறில் இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே உள்ள மீரா சோரேசாய் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நேற்றிரவு பெரியவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில் இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் ஒருதரப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.