கோஸ்டி மோதலுக்கு சென்ற 13 இளைஞர்கள் கைது 

Published By: Digital Desk 4

24 Jul, 2018 | 11:01 PM
image

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை "ஐ" குழு எனவும் "சவா" குழு எனவும் அடையாளப்படுத்திக் கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 குறித்த குழுவினர் இன்று மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாழ் பகுதியில் கோஸ்டி மோதல் ஒன்றுக்கு தயாராக வாள்கள் , இரும்பு கம்பிகள் . பொல்லுகளுடன் 13 இளைஞர்கள்  வாகனமொன்றில் சென்றுள்ளனர். 

இளைஞர்கள் கோஸ்டி மோதலுக்கு தயாராக எழுமட்டுவாழ் பகுதிக்கு செல்கின்றனர் எனும் இரகசிய தகவல் கொடிகாம பொலிசாருக்கு கிடைக்க பெற்றதை அடுத்து இளைஞர்களை மடக்கி பிடிக்க கொடிகாம பொலிசார் எழுமட்டுவாழ் பகுதியில் தயார் நிலையில் இருந்த போது , பொலிசாரை கண்ட இளைஞர் குழு வாகனத்தில் மருதங்கேணி பகுதியூடாக தப்பி சென்றுள்ளனர். 

இது குறித்து பளை பொலிசாருக்கு,  கொடிகாம பொலிசார்  அறிவிதத்தை அடுத்து , பளை பொலிசார் மருதங்கேணியில் உள்ள பளை பொலிசாரின் காவலரணுக்கு அறிவித்துள்ளனர். 

அதனையடுத்து மருதங்கேணி காவலரணில் தயார் நிலையில் இருந்த பளை பொலிசார் இளைஞர்களின் வாகனத்தை மடக்கி பிடித்தனர். 

வாகனத்தில் இருந்த 13 இளைஞர்களையும் கைது செய்த பொலிசார் , வாகனத்தில் இருந்து வாள்கள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர். 

கைது செய்யபட்ட 13 இளைஞர்களையும் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14