(நா.தினுஷா) 

காலி விளையாட்டு மைதானத்தை இடமாற்றம் செய்வதற்கு எந்தவித திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் யுனெஸ்கோவின் பாரம்பரிய தரப்பட்டியலிலிருந்து காலி விளையாட்ரங்கை நீக்குவதற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

யுனெஸ்கோ அமைப்பின் இலங்கை தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவித்த அவர், யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் எரினா இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது காலி கிரிக்கெட் மைதானத்துக்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியான பார்வையாளர் அரங்க கூடாரம் குறித்து அவர் கருத்தினை வெளியிட்டிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.