ஏறாவூர் பொலிஸ் பிரிவு, புன்னைக்குடா வீதியிலுள்ள ஐயன்கேணி சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறிய ரக உழவு இயந்திரத்தின் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஏறாவூரைச் சேர்ந்த 42 வயதான முஹம்மத் கலீல் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

சிறிய ரக உழவு இயந்திரத்தில் நெல் மூடைகளை ஏற்றிக் கொண்டு புன்னைக்குடா வீதிக்குத் திரும்பும்போது எதிரே வந்த பட்டா ரக வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் உழவு இயந்திர சாரதி தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.